திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 02:02
அவிநாசி; திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
திருமுருகன் பூண்டியில் கொங்கேழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருமுருகநாத சுவாமி கோவிலில் ,தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். திருமுருகநாதருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.