பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
மேஷம்: அசுவினி நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் வேலைகளை எல்லாம் லாபமாக்குவார். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம், வாகனம், தொழில் என்னும் உங்கள் கனவு நனவாகும். இதுவரை விலகிச்சென்ற உறவினர்களும் உங்களைத் தேடி வருவர். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எத்தகைய முயற்சி மேற்கொண்டும் முடியாமல் இருந்த வேலைகளும் இனி முடிவிற்கு வரும். நினைத்த செயல் நடந்தேறும். தடைபட்ட வேலைகளில் மீண்டும் ஈடுபட்டு லாபம் காண்பீர்.
குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி ஆகும். குரு பகவானின் சஞ்சாரத்தால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உடலில் இருந்த சங்கடம் விலகும். போட்டியாளர்கள் பலம் இழந்து பின்வாங்கிச் செல்வர். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். காவல்துறையினருக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகள் நிலை உயரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் முன்னேற்றமடைவர். மேல்நிலை மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: பிப். 20, 21.
அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 18, 25, 27. மார்ச் 7, 9.
பரிகாரம்: செல்வ கணபதியை வழிபட நன்மைகள் நடக்கும்.
பரணி: அதிர்ஷ்டக்காரகனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய கனவு நனவாகும். முடங்கிக்கிடந்த தொழிலை மீண்டும் தொடங்குவீர்கள். ராசி நாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மண்ணைத் தொட்டாலும் இந்த நேரத்தில் பொன்னாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சி ஆதாயம் தரும். அரசியல்வாதியின் செல்வாக்கு அதிகரிக்கும். மறைந்துக்கிடந்த புகழ் வெளிப்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். புதிய சொத்து சேரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் குடும்பத்தின் நிலை உயரும். பொன் பொருள் சேரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிலை உயரும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுத் தேர்விற்கு படிக்கும் மாணவர் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: பிப். 21, 22.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24, 27. மார்ச். 6, 9.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை நடக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டுவதுடன் எப்போதும் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். நினைத்த வேலைகளை நினைத்தபடி இந்த மாதத்தில் நடத்துவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசுவழி வேலைகளில் லாபத்தை உண்டாக்குவார். நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குவதற்காக எடுத்துக்கொண்ட வேலை முடியும். செய்து வரும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பண வரவு அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரி ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சுணக்கம் தீரும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 22.
அதிர்ஷ்ட நாள்: பிப். 18, 19, 27, 28. மார்ச். 1, 9, 10.
பரிகாரம்: சூரியனை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.