பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம்
நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியனால் உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, பிரச்னை, வழக்கு முடியும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கடந்தகால நெருக்கடி விலகும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். புதிய சொத்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். ராகுவால் வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை அகலும். புதிய முயற்சிகளை லாபமாக்குவார். அந்நியரால் லாபம் கூடும். உங்கள் மனம் தெளிவடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 22, 23.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 19, 24, 28. மார்ச். 1, 6, 10.
பரிகாரம்: தேனுபுரீஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.
ரோகிணி: எதையும் எதிர்கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நினைத்தது நிறைவேறும் மாதம். பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடந்தகால நெருக்கடி விலகும். சனி பகவானால் ஏற்பட்ட நெருக்கடி குறையும். அலுவலகத்தில் உங்கள் மீதிருந்த வழக்கு முடிவிற்கு வரும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைக் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக் கிடைக்கும். குடும்பத்திலிருந்த நெருக்கடி விலகும். தெய்வ அருளும், பெரியோரின் உதவியும் கிடைத்து உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வீடு என்ற கனவு நனவாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். தொண்டர்கள் பலம் கூடும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தன குடும்ப ஸ்தானத்தில் விரயாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. விவசாயிகள் தங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: பிப். 23, 24.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 20, மார்ச் 2, 6, 11.
பரிகாரம்: சிவனை வழிபட உடலும் மனமும் சீராகும்.
மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: எதிலும் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் பிப். 21 ல் வக்ர நிவர்த்தி அடைவதால் செயல்களில் கவனம் வேண்டும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவு செலவில் நிதானம் தேவை. ராகு எதிர்பார்த்த வருமானத்தை வழங்குவார். சூரியனால் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். நேற்றைய முயற்சி இந்த நேரத்தில் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பெரியோரின் துணையும் ஆசீர்வாதமும் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரித்து வருவதால் அலைச்சல் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு என வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடியும். பிள்ளை வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகி அவர்களால் பெருமை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் மனம் படிப்பில் இருக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப். 24.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 27. மார்ச். 6, 9.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.