காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2025 10:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான முதல் நாள் தெப்போற்சவம் நேற்று துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள் ‘அனந்தசரஸ்’ என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார்.