பதிவு செய்த நாள்
17
பிப்
2025
10:02
மேட்டுப்பாளையம்; வெண்ணெய் அலங்காரத்தில் அபீஷ்ட வரத ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தாளத்துறையில் டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் வாரம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். மாசி மாதம் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதம் பாடப்பட்டது. தாஸன் ரிஷி பட்டர் ஆஞ்சநேயருக்கு, வெண்ணெயில் அலங்காரம் செய்தார். பின்பு மங்கள ஆரத்தியும், பூஜையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.