Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் சர்வதேச கோயில்கள் ... கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
12:02

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள காந்திநகர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


காந்தி நகரில் உள்ள பழமையான செல்வமுத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோவில், பாலமுருகன் கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழா, காலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, நவகிரக வேள்வி, காப்பு அணிவித்தல், நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர், அவற்றை திருக்குடங்களில் எழுந்தருள செய்து, செல்வமுத்து மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் கருவறையிலிருந்து யாக சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முதல் கால வேள்வி, மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மங்கல இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. திருமஞ்சனம் சாத்துதல், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. நாடி சந்தானம், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 8:30 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், வாராகி மணிகண்ட சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கியார தேசிய சுவாமிகள் முன்னிலையில் திருக்குறள் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar