கொடைக்கானல்; கொடைக்கானல் செண்பகனூர் பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாட்கள் யாகசாலை ஹோமங்கள் நடந்தன.தொடர்ந்து தீபாராதனையடன் கடம் புறப்பாடு செய்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பத்ரகாளியம்மன், மகா கணபதி, சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. மகா தீபாரதனை செய்யப்பட்டது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.