Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கும்பமேளாவை இழிவுபடுத்துவோர் ... மஹா கும்பமேளாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; திரிவேணி சங்கமத்தில் அனுஷ்டானம் செய்தார் மஹா கும்பமேளாவில் விஜயேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2025
12:02

ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின் நடந்த புதிய தேர் வெள்ளோட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலுக்கு சொந்தமான தேர் முற்றிலும் பழுதானது. இதனால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டமே நடக்கவில்லை.


இந்நிலையில் கோவில் பராமரிப்பு பணி, புதிய தேர் வடிவமைப்பிற்கு தமிழக அரசு கடந்தாண்டு நிதி ஒதுக்கியது. இதையொட்டி, ரூ.75.50 லட்சம் மதிப்பில், 15 அடி உயரம் கொண்ட திருத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று காலை 10:20 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர் வடம் பிடித்து இழுத்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான மக்கள் தேரினை வடம் பிடித்து மாட வீதி வழியாக இழுத்து சென்றனர். தொடர்ந்து, தேர் கோவில் நிலையை அடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar