வடபழனி ஆண்டவர் கோயிலில் விடிய விடிய நடந்த மகா சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 01:02
சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இரவு 8:30 முதல் காலை 4:30 மணி வரை, சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தது. முதல் கால பூஜை இரவு 8:30 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 1:00 மணிக்கும், நான்காம் கால இன்று அதிகாலை 3:00 மணிக்கும் நடந்தது. ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதை தொடர்ந்து பஜனையும் நடைபெற்றது. விடிய விடிய நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.