மகா சிவராத்திரி விழா; காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 05:02
உசிலம்பட்டி; உசிலம்பட்டி வகுரணி காமாட்சியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழாவில், கோடை காலத்தை எதிர்கொள்ள மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு அனைத்து சமூகத்தினரும் இணைந்து மகாசிவராத்திரி விழாவை கொண்டாடினர். பருவகால மாற்றத்தை ஏற்று வரவேற்கும் வகையில், மழைக்காலத்திற்கு கிருமிநாசினியாகும் வகையில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் அருகே உள்ள சந்தைப்பட்டி, குறுக்கம்பட்டி, கணவாய்ப்பட்டி, நாவார்பட்டி, அயோத்திபட்டி பகுதி கிராமத்தினர், குடம், பானைகளில் வேப்பிலை, மஞ்சள் நீர் எடுத்து கோயிலை வலம்வந்தனர். பின் மஞ்சள் நீரை கோயில் முன்புள்ள தொட்டியில் ஊற்றினர். அனைவரும் ஊற்றியபின் தொட்டியில் உள்ள மஞ்சள் நீரை எடுத்துச் சென்று வீடுகளைச் சுற்றி தெளித்தனர். மேலும் முறைப்பெண், முறைமாமன்கள் மீதும் மஞ்சள் நீர் தெளித்து கொண்டாடினர்.