பதிவு செய்த நாள்
28
பிப்
2025
10:02
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில், கோவிலில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்து பார்த்து பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்,
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமம் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும் போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே, கோவிலில் இருந்த கிராம மக்கள், சிவன்ராத்திரி தினத்தில் இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளித்து உள்ளார் என, சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து பூஜை நடத்தினர். இத்தகவல் அப்பகுதிகள் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுடன் சிறப்பு பூஜைகளும் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும்,பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சிவலிங்கம் வடிவிலான தேங்காயை பார்த்துச் செல்கின்றனர்.