மூங்கிலணை காமாட்சியம்மன் திருவிழா பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2025 07:03
தேவதானப்பட்டி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பக்தர்கள் திரண்டனர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழா பிப்.26 முதல் மார்ச் 5 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் 4 ம் நாள் திருவிழா பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஏராளமான பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து முடிகாணிக்கை, அக்னி சட்டி எடுத்தல், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் படுக்க வைத்து பெண்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் கூட்டத்தை முறைப்படுத்தும் பணியில் பெண் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இன்று (மார்ச் 2) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.