பதிவு செய்த நாள்
03
மார்
2025
10:03
சிதம்பரம்; சிதம்பரத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடந்த நாட்டியாஞ்சலி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள, வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 நாட்களாக நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகள், மாநிலங்களை நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, தங்களின் நாட்டியத்தை அஞ்சலி செலுத்தினர். நேற்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு நாளான நேற்று சிதம்பரம் சித்ரலாசியலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிறைவு விழாவில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். நடனக் கலைஞர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நினைவுப் பரிசு வழங்கினார். செயலாளர் சம்மந்தம், டாக்டர் அருள்மொழிச்செல்வன், அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ராமநாதன், டாக்டர் கணபதி, சபாநாயகம், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.