குன்றத்தூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 10:03
சென்னை; 500 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது மலை குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் பல்வேறு காரணங்களால் கடந்த 500 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படாமல் இருந்து வந்தது இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதன் காரணமாக சூரசம்ஹாரம், பிரம்மோற்சவம், தைப்பூச விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக சுமார் 500 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து முடித்து வைக்கப்பட்ட பின்பு வேல், சேவல் கொடியுடன் கூடிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு பிரம்மோற்சவ இன்று தொடங்கியது தினமும் காலை மாலை என இரு வேலைகளில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இன்று தொடங்கிய பிரம்மோற்சவ விழா மார்ச் மாதம் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐந்தாம் நாளான, 7ம் தேதி காலையில் கேடய உற்சவமும், மாலையில் திருக்கல்யாணமும், ஏழாம் நாளான 9 ம் தேதி ரத உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.