Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோயிலில் காப்பு ... காரமடை அரங்கநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம் காரமடை அரங்கநாதர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
03:03

கோவை; கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று கோலாகமாக நடைபெற்றது. 


கோவையின் காவல்தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 18ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது. பிப்.,24 அன்று கிராமசாந்தி நிகழ்ச்சியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. அன்றாடம் மேளதாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கம்பத்தில், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. பிப்.,26 முதல், புலி, கிளி, சிம்ம, அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. வழக்கமான வைதீக முறைப்படி கலாசாரமும் பண்பாடும் மாறாமல், திருக்கல்யாண வைபவம் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், மங்கல தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று பகல் 2:05 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்தனர். ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், அன்னூர். மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை நகர வீதிகளில் தேர் பவனி வரும் காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.தேரின் உள்ளே நடுநாயகமாக கோரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar