பதிவு செய்த நாள்
06
மார்
2025
12:03
திருப்பூர்; ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். திருப்பூர், கோவில்வழி, பிள்ளையார் நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா கடந்த 25ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. இம்மாதம் 2ம் தேதி, பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல்; 3ம் தேதி, பால்குடம், தீர்த்த குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகமும் அன்று இரவு, 8:00 மணிக்கு, மேள தாளங்களுடன் கோவில்வழி ஈஸ்வரன் கோவிலிலிருந்து, கம்பம், கும்பம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. நேற்றுமுன்தினம் மாலை நடந்த விழாவில், முத்தாரம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, திரளான பக்தர்கள் கையில் பூவோடு, தலையில் முளைப்பாளிகை எடுத்துவந்தனர். பிள்ளையார் நகரின் அனைத்து வீதிகள் வழியாக வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து படைக்கலம் எடுத்துவரப்பட்டது நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் விழா நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான இன்று, காலையில் மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, அன்னதானம் நடைபெறுகிறது.