Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்ன வாகனத்தில் காரமடை அரங்கநாத ... தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா; தீர்த்திக்குடம் ஊர்வலம் தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் தேரோட்டம் நிறைவு; அம்மனுக்கு சீர் வரிசை செய்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் தேரோட்டம் நிறைவு; அம்மனுக்கு சீர் வரிசை செய்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

08 மார்
2025
11:03

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், முஸ்லிம்கள் அம்மனுக்கு சீர் வரிசை செய்தனர்.


பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, வெங்கட்ரமணன் வீதியில் நேற்றுமுன்தினம் நிலைநிறுத்தப்பட்ட தேர், இரவு வடம் பிடித்து சத்திரம் வீதிக்கு சென்றது. பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் சார்பாக, இஸ்லாமியர்கள், அம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு சென்று, கோவில் பரம்பரை அறங்காவலர் மாணிக்கம், அவரது மகன் ஹரிஹரசுதன், கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது.பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைவர் ஹாஜி ஜாகீர் உசேன், செயலாளர் ஹாஜி அன்வர் பாஷா, பொருளாளர் முஸ்தாக் அகமது, நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நல்விடியல் சமூக நல அறக்கட்டளை, பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மதநல்லிணக்க குளிர்பான விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், விழாவை துவக்கி வைத்தார். போலீசார், அமைப்பினர், பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. சத்திரம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில், நேற்று இரவு அம்மனுக்கும், விநாயக பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன்பின், சந்திரம்வீதி, மார்க்கெட் ரோடு வழியாக கோவில் வளாகத்தில் தேரோட்டம் நிறைவடைந்தது. அதன்பின், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar