தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா; தீர்த்திக்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2025 11:03
சின்னாளபட்டி; சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில், நேற்று அசலை (சிறுமலை) தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சின்னாளப்பட்டியில் அம்பாத்துறை செல்லும் ரோட்டின் குளக்கரையில், தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா பிப். 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. நேற்று மாசி மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று, சிறுமலையில் உள்ள அசலை(சிறுமலை)க்கு சென்று சிரஞ்சீவி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.