பதிவு செய்த நாள்
08
மார்
2025
12:03
ஆனைமலை; ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணம் உச்சிமாகாளியம்மன் கோவிலில், குண்டம் மற்றும் திருத்தேர் விழா நேற்று நடந்தது. ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் உச்சிமாகாளியம்மன் கோவிலில், குண்டம் மற்றும் திருத்தேர் விழா கடந்த மாதம், 18ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 26ம் தேதி கொடியேற்று விழா பூஜைகள் நடைபெற்றது. கடந்த, 4ம் தேதி சக்தி கும்ப ஸ்தாபனம் பூஜைகள் துவங்கின. 5ம் தேதி மாவிளக்கு, பூவோடு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த, 6ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று, 61 அடி நீளம் உள்ள குண்டத்தில் பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று, திருத்தேர் நிலை சேர்தல், அம்மன் பரிவேட்டை நடக்கிறது. வரும், 14ம் தேதி மஹா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.