பதிவு செய்த நாள்
11
மார்
2025
10:03
பாடி: பாடி திருவல்லீஸ்வரர் கோவில் குளத்தை, 1.80 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி மற்றும் 84 லட்சம் ரூபாயில் புதிய தேர் உருவாக்கும் பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
கைலாசநாதர் கோவிலில்,3.50 கோடி ரூபாயில், சாலை மட்டத்திற்கு கோவிலை உயர்த்தும் பணியையும் அவர் துவக்கி வைத்தார். பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இதுவரை, 2,664 கோவில்களிலும் குடமுழுக்கு நடந்துள்ளது. புதிதாக, 74 கோடி ரூபாயில், 114 தேர் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும், 31 கோடி ரூபாயில் ஐந்து தங்க தேர், 29 கோடி ரூபாயில் ஒன்பது வெள்ளி தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவில்களில், 120.33 கோடி ரூபாயில், 220 குளங்கள் உருவாக்கும் பணி நடக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, 940 கோவில்களுக்கு சொந்தமான, 7,196 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும், 24,572 கோவில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கபட்டு, 5,000 கோடி ரூபாயில் திருப்பணி நடந்து வருகிறது. இதற்காக, உபயதாரர்களிடம் இருந்து, 1,308 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.