சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மக விழா; சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2025 11:03
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மக விழாவில் சண்முகார்ச்சனை நடந்தது. . 49ம் ஆண்டு திருச்செந்தூர் சைக்கிள் யாத்திரை மேற்கொள்ள பலநூறு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து கோயிலில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் சண்முகார்ச்சனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டனர். இன்று காலை பால்குட உற்சவம் நடக்கிறது.