பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
சிக்க பானஸ்வாடி; பெங்களூரு சிக்க பானஸ்வாடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது. பெங்களூரு சிக்க பானஸ்வாடி மாருதி பள்ளி அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மஹாமண்டபம், பரிவார சன்னிதிகள் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. புதிதாக விமான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் கிரானைட், பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோவில் பஞ்ச வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வரும் 31ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், ரிஷப லக்னத்தில் ஸ்ரீ விநாயகர் முதலான பரிவாரங்களுடன் கூடிய சின்னமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு புனராவர்த்தன ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 6:30 மணிக்கு மங்கள இசையுடன் யாக பூஜை ஹோமங்கள் ஆரம்பமாகின்றன. பிம்பசுத்தி, பிம்ப ரக் ஷபந்தனம், நாடீஸந்தானம்; 9:00 மணிக்கு சிறப்பு மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிரஹப்ரீதி, கலசங்கள் ஏற்பாடு; 9:30 மணிக்கு ஸ்ரீவிமான கோபுரம் கும்பாபிஷேகம், ஸ்ரீவிநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுடன் கூடிய, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மஹாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பூஜை தொடர்பான தகவல்களை 96001 89831, 73538 64372 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.