Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... திருமுக்கூடல் பாலாற்றங்கரையில் மாசிமக தீர்த்தவாரி திருமுக்கூடல் பாலாற்றங்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி பவுர்ணமி; சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி பவுர்ணமி; சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

13 மார்
2025
03:03

விருதுநகர்; மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 


இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் படுக்கையில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசி  மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை    முன்னிட்டு கடந்த 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி  கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.  


இன்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விருதுநகர், மதுரை , தேனி ,திண்டுக்கல், திருச்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயில்  அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்பு 6:30 மணிக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள கேட் திறக்கப்பட்டது . பின்னர் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே அனுமதி எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும்  வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தினந்தோறும் பக்தர்கள் செல்லலாம் என தீர்ப்பு  வழங்கி உள்ள நிலையில் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், கோயிலுக்கு பக்தர்கள் யாரும் தினமும் வருகை தந்து ஏமாற  வேண்டாம் எனவும் ஏற்கனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள 8  நாட்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar