பதிவு செய்த நாள்
13
மார்
2025
05:03
தனுசு: மூலம் நல்லெண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். கேது பகவானுக்கு குருவின் பார்வைக் கிடைப்பதால் செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை, வழக்கு முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி ஆதாயம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் எதிர்பார்த்த வரவு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளிநாடு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். நேற்றைய முயற்சிகள் வெற்றியாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். திட்டமிடாமல் கூட ஒரு சில வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கேந்திர பலத்துடன் சூரியனும் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 6
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 21, 25, 31. ஏப். 3, 7, 12.
பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம்; பிறருக்கு வழிகாட்டியாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் ராசிநாதன் குருவும் நட்சத்திர நாதன் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் எதிர்பார்த்த வருமானம் வரும். திட்டமிட்ட வேலை சுலபமாக நடக்கும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். குரு பகவானின் பார்வைகளால் வியாபாரம் மேன்மை அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் பலமும் தலைமையின் ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை கூடும். எதிலும் தனித்து நின்று சாதித்திடக் கூடிய அளவிற்கு உங்களுடைய நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கடந்தகால நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. முதியவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவதும் நோய் வந்தவுடன் மருத்துவரைச் சந்திப்பதும் அவசியம்.
சந்திராஷ்டமம்: ஏப். 7.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3, 6, 12.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 1 ம் பாதம்; எதிலும் தனித்துவத்துடன் திகழும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் பாக்கியாதிபதி கேந்திர பலம் பெறுவதால் அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை, வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அனுமதிக் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் லாபம் கூடும். அந்நியர்களால் லாபம் கிடைக்கும். சகாய ஸ்தான சனியால் உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நடைபெறாமல் இருந்த வேலை இப்போது முடிவிற்கு வரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் செவ்வாய் உங்கள் திறமையை அதிகரிப்பார். வேகமாகவும் செயல்பட வைப்பார். இத்தனை நாளும் சோர்வாக இருந்த நீங்கள் இந்த மாதத்தில் வேகமாக செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய இடம், வீடு, வாகனம் வாங்கிடக் கூடிய நிலை உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதலாக கவனம் செலுத்துவது அவசியம். தம்பதிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது முக்கியம். சிறு வியாபாரிகள் நிலை உயரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் மாதம் இது.
சந்திராஷ்டமம்: ஏப். 8.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 21, 28, 30. ஏப். 1, 3, 10, 12.
பரிகாரம்: மங்கள ஈஸ்வரரை வழிபட மனக்கவலை விலகும்.