பதிவு செய்த நாள்
13
மார்
2025
05:03
மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: வெற்றியை நோக்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தித் தருவார். இதுநாள் வரை தடைபட்ட வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். மேலும், செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். வீட்டில் சுப செயல் நடக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். வீடு, மனை கனவு நனவாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை உண்டாவதால் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் செல்வாக்கினை கண்டு ஒரு சிலர் உங்களுக்கு எதிராக சதி புரிவார்கள். நேர்மையும் ஒழுக்கமும் உங்களைப் பாதுகாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள் நிலை உயரும். சிறு வியாபாரிகள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 8, 9.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 19, 26, 28. ஏப். 1, 10.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையை உண்டாக்கும்.
திருவோணம்; எதிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக விலகும். ராகுவும் சூரியனும் நீங்கள் எடுக்கும் வேலைகளை எல்லாம் வெற்றியாக்குவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் செல்வாக்கும் உயரும். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் செல்வாக்கை உயர்த்துவார். சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுப்பார். தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுவித்து உங்கள் நிலையில் மாற்றத்தை அளிப்பார். செவ்வாய் பகவான் எதிர்ப்பற்ற நிலையினை உங்களுக்கு வழங்குவார். வியாபாரத்தில் தோன்றிய போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். வழக்கு சாதகமாகும். அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும், நான்கு, எட்டாம் இடங்களுக்கு உண்டாகும் அவருடைய பார்வைகளும் உடல் நிலையில் சங்கடங்களை அதிகரிக்கும். எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. வயதானவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வீடு, மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வருமானம் பல வழியிலும் வரும். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஏப். 9, 10.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 26, 29. ஏப். 2, 8, 11.
பரிகாரம்: பாடலீஸவரரை வழிபட வளம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம் ; விடாமுயற்சியுடன் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். செவ்வாய் பகவான் உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். உடல் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தைரியமாக செயல்படக்கூடிய நிலையினை வழங்குவார். குரு பகவானின் அருளால் செல்வாக்கு மென்மேலும் உயரும். இதுவரை உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் மதிப்பு, மரியாதை கொடுப்பார்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் சூரியனும் நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார்கள். செய்யும் முயற்சிகளை லாபமாக்குவார். வரவேண்டிய பணம் வரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர். அடைய நினைத்த இடத்தை அடைவீர். அரசியலில் உண்மை தொண்டர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இசை துறையினரின் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமும் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கிடைக்கும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சேவை, தொண்டு புரிபவருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 10.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.
பரிகாரம்: முருகனை வழிபட தடைபட்ட வேலை நடக்கும்.