பதிவு செய்த நாள்
14
மார்
2025
07:03
சென்னை; பெண்களின் சபரிமலை எனும் திருவனந்தபுரத்தில் உள்ள, ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழா, சென்னை, புறநகர் கேரள பெண்களுக்கு வசதியாக, சென்னையிலும் நடத்தப்படுகிறது. மீனம்பாக்கம், பின்னி மில்ஸ் மைதானத்தில் சுனந்தன் நம்பூதிரி தலைமையில், பொங்கல் விழா நேற்று விமரிசையாக நடத்தப்பட்டது. பாரதிய சம்ஸ்கிருதி சங்கம் ஏற்பாடு செய்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமும் பின், விருஷ, கோ, நாக பூஜைகளும் நடந்தன. காலை 9:00 மணிக்கு தேவி பூஜை நடந்தது. தொடர்ந்து சென்னை, கைரளி கலா சங்கம் சார்பில், பஞ்சாரி மேளம் கொட்டப்பட்டது. சென்னை, புறநகரைச் சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் கவுதமி, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.