மூணாறு: சபரிமலை செல்லும் வெளி மாநில பக்தர்கள்,கேரளாவில் பலவிதங்களில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், இடுக்கி மாவட்ட ஓட்டல்களில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி, அனைத்து ஓட்டல்களிலும் விலை பட்டியல் வைத்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்க வேண்டும், என ஓட்டல் மற்றும் ரெஸ்ட்ரான்ட் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை மீறி,பல ஓட்டல்களில் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, வெளி மாநில பக்தர்கள் குறி வைத்து ஏமாற்றுப்படுகின்றனர். ஆட்களை பொறுத்து விலை நிர்ணயத்து வசூலிக்கப்படுகிறது. சில ஓட்டல்களில் சாதாரண மக்களுக்கு,பக்தர்களுக்கு என வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த உணவும் வழங்கப்படுவதில்லை. தற்காலிக ரோட்டோரக் கடைகளும் அதிகரித்துள்ளன.இவற்றிலும் விலை கட்டுக்கடங்காமல் உள்ளது. திடீர் விலை உயர்வால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.