பதிவு செய்த நாள்
08
டிச
2012
10:12
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில், ஐயப்ப பக்தர்கள் குளிக்க, ஊற்றுத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கிராமப் புறங்களில், சபரிமலைக்கு மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பது வழக்கம். தற்போது பருவமழை பொய்த்து, விருத்தாசலம் மணிமுக்தாறு தண்ணீரின்றி வறண்டுள்ளதால், ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விருத்தாŒலம் பகுதியைச் @Œர்ந்த சிலர், மணிமுக்தாற்றில் பள்ளம் தோண்டி, அதில், இரும்பு பாரலின் அடிப்பகுதியை எடுத்து விட்டு புதைத்துள்ளனர்.பார்ப்பதற்கு தரைக்கிணறு போன்று தோற்றமளிக்கும் இரும்பு பாரலுக்குள்ளிருந்து, ஊற்றுத் தண்ணீரை எடுத்து, ஐயப்ப பக்தர்கள் குளிக்கின்றனர். ஊற்று @தாண்டி பாரல் புதைத்தவர்கள், புதியதாக வரும் பக்தர்களிடம், 5 ரூபாயும், தொடர்ந்து வரும் பக்தர்களிடம், 3 ரூபாயும் வசூலிக்கின்றனர்.தினமும், இரு @வளைகளிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் ஊற்றுத் தண்ணீரில் குளிக்க வருவதன் மூலம், ஊற்று @தாண்டியவர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.