திருப்புல்லாணி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2025 05:03
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சி பஞ்சந்தாங்கி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு பிப்.,2ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை பூர்த்தியானதை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் யாகவேள்வி வளர்க்கப்பட்டு கும்பங்களில் புனித நீர் ஊற்றி வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. திருப்புல்லாணி பாபு சாஸ்திரிகள் தலைமையில் சித்தி விநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேக அலங்கார தீபராதனைகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி நாடார் உறவின்முறை கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.