Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி முத்துமாரியம்மன் ... சி.இ.ஓ., பதவியை உதறி விட்டு துறவறம்; குகையில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி சி.இ.ஓ., பதவியை உதறி விட்டு துறவறம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 மார்
2025
06:03

திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தை சேர்ந்தவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் நாட்களில் அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் நேற்று இரவு 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருத்தது. கொடி மரத்திற்கு சந்தனம்,பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்ட பின் பலிபீடத்துடன் சாமரம், சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கொடி மரத்திற்கு பக்தர்கள் நேர்த்திகடனாக மாலைகளை வழங்கினர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தன்னாயிரம் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர். கொடியேற்றத்திற்கான பூஜைகளை செந்தில்பட்டர், விக்னேஷ் பட்டர், விவேக் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், 28ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar