தேய்பிறை அஷ்டமி; ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 11:03
கோவை; கோவை சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு வபரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கால பைரவரை வழிபட சிறந்த நாள் இந்த தேய்பிறை அஷ்டமி. வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.