பதிவு செய்த நாள்
24
மார்
2025
01:03
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரிலுள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா கடந்த, 21ல் துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை வ.உ.சி., நகர், முனீஸ்வர் நகர், சீனிவாசா கார்டன், நாதன் நகர், தேஜஸ் நகர், பூஞ்சோலை நகர், அன்னை நகர், ஆதவன் நகர், அக்ஷரா ஹோம்ஸ், சிவக்குமார் நகர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 150க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர். தொடர்ந்து ஒரு டன் ஆட்டிறைச்சி கொண்டு பிரியாணி சமைக்கப்பட்டு, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அசைவம் சாப்பிடாத, 2,000க்கும் மேற்பட்டோருக்கு வெஜ் பிரியாணி, தயிர்சாதம் பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை முனீஸ்வரன் கோவில் செயலாளர் பிரகாஷ், தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் முத்துக்குமார் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.