திருவோணம், ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட வீட்டில் அமைதி, ஆனந்தம் நிலைக்கும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 10:03
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம், ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் இருப்போர் அளவில்லா செல்வம், உயரிய நிலையை பெறலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. இன்று சிவன், பெருமாளை வழிபட்டு அவர்களின் திருவடியை போற்றுவோம்!