சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2025 10:03
கோவை; கோவை, சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் 56 -வது ஆண்டு விழா 26.03 - 2025 அன்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தின் முன்பு கொடியேற்று நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை மாலை ஆலய சுத்தி நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினசரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.வெள்ளிக்கிழமை அன்று சுவாமிக்கு களாபிஷேகம் , மாலை 07.30 மணிக்கு வீரமணி ராஜு குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. சனிக்கிழமை அன்று மாலை பாலே நடனம் அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப சேவா சங்கம் 70 -வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.ஏப்ரல் 1-ம்தேதி பள்ளி வேட்டை நடைபெறுகிறது. இதில் மூன்று யானைகளுடன் பஞ்ச வாத்தியம் மற்றும் மேல தாளங்களுடன் ஐயப்ப சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளுகிறார். அடுத்த நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. நிறைவாக 03-04-2025அன்று சுவாமிக்கு அத்தாழ பூஜை மற்றும் குருதி பூஜை ஆகிய நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.