பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2025 05:03
பண்ருட்டி,; பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு உற்சவர் பெருமாளுக்கு காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், பின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.