சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2025 04:03
சின்னமனுார்; சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்து 48 வது நாளை முன்னிட்டு இன்று நடந்த, மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக ஊர் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்டது. மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்.10ல் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, இன்று காலை மண்டல பூஜைகள் நடந்தது. இன்று காலை கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பு யாகங்கள் நடந்தது. கலசங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு யாக குண்டங்களில் வைத்து அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சிவகாமியம்மனும், பூலாநந்தீஸ்வரரும் எழுந்தருளினர். 48 நாள் மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நிறுத்தப்பட்ட புளிப்பு சுவை கலந்த பொருள்களின் அபிஷேகமும் நடந்தது. அஷ்டபந்தனம் கரையாமல் இருக்கவே புளிப்பு சுவையுள்ள பொருட்களால் அபிஷேகம் நிறுத்தப்படும். தற்போது மண்டல பூஜை நிறைவடைந்ததை முன்னிட்டு அனைத்து விதமான பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மண்டல பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.