பதிவு செய்த நாள்
10
டிச
2012
03:12
சமயோசித செயலால் பிறரை வசீகரிக்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சனி, ராகு, புதன் செயல்படுகின்றனர். ஆறு, எட்டாம் இட அதிபதி கிரகங்களான குரு, சுக்கிரன் சம சப்தம ஸ்தானங்களில் உள்ளனர். இதனால் உங்களால் இயலாத ஒன்றை, நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொள்வீர்கள். இதனால் தேவையற்ற கால விரயமும், செலவும் ஏற்படலாம். கவனம். தம்பி, தங்கையின் ஆறுதல் வார்த்தை மனதுக்கு நம்பிக்கை தரும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமான வகையில் தொடர்ந்து கிடைக்கும். புத்திரர்கள் உங்கள் சொல்லை மதித்து நடப்பர். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். தம்பதியர் சிறு மனக்குறையை பெரிதுபடுத்தாமல் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணைநிற்கும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணி செய்து உற்பத்தி அளவு, தரத்தை உயர்த்துவர். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் விற்பனை அளவை உயர்த்துவர். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் வீட்டுப்பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் மனநிம்மதி, சலுகை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையைப் பெருக்க புதிய முயற்சிகளை துவங்குவர். அரசியல்வாதிகளுக்கு திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் இருக்கும். விவசாயிகள் தாராள மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 10.1.13 அதிகாலை 2.45 மணி முதல் 12.1.13 காலை 5.24 மணி வரை
வெற்றி நாள்: டிசம்பர் 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 8, 9