பதிவு செய்த நாள்
10
டிச
2012
03:12
மார்கழி ராசிபலன் (16.12.12 முதல் 13.1.13): அனுபவம் தந்த படிப்பினையை மறக்காத மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சபலத்துடன் மகரத்தில் இருக்கிறார். இந்த மாதம் நற்பலன் வழங்கும் கிரகங்களாக அசுரகுரு சுக்கிரனும், தேவகுரு வியாழனும் சம சப்தமமாக அமர்ந்து செயல்படுகின்றனர். இந்த இரண்டும் நன்மை வழங்க காத்திருக்கின்றனர். புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். பணவரவு அமோகமாக இருக்கும். வீடு, வாகன ஸ்தானத்தை உச்சம் பெற்ற கிரகங்களான சனி, செவ்வாய் பார்க்கின்றனர். இதனால் வீட்டில் தகுந்த பாதுகாப்பும் வாகன பயணத்தில் மிதவேகமும் பின்பற்றுவது அவசியம். புத்திரர் கவனக்குறைவினால் படிப்பு, வேலைவாய்ப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. ஆரோக்கியம் ”மாராக இருக்கும். தம்பதியர் பாசத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தின் தேவை நிறைவேறும். நண்பர்களின் உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். தொழிலதிபர்கள் விறுவிறுப்புடன் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு அமோக லாபம் காண்பர். வியாபாரிகள் கூடுதல் சந்தை வாய்ப்பு பெற்று விற்பனையில் முன்னேற் றம் காண்பர். பணியாளர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. குடும்ப பெண்கள் கணவரின் அன்பும், சீரான பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி சலுகைப்பயன் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் உயர்வு காண்பர். லாபவிகிதம் கூடும். அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். எதிரிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு சீரான மகசூலும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வர். விளையாடும்போது கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் பெருகும்.
உஷார் நாள்: 7.1.13 இரவு 12.24 - 9.1.13 -இரவு 2.45
வெற்றி நாள்: டிசம்பர் 27, 28, 29
நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 2, 9