நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 04:03
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் 48 நாட்கள் நடந்தது. மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று நடந்தது. மூலவர் அத்தி மரத்தாலானது என்பதால் அபிஷேகங்கள் செய்வதில்லை. இதற்கு பதிலாக உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாரதனை நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி ருக்குமணி சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.