அம்மை நோய் தாக்காமல் இருக்க நடைபெற்ற அம்மன் மலையேறும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 02:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அம்மை நோய் தாக்காமல் இருக்க அம்மன் மலையேறும் திருவிழா நடத்தப்பட்டது. இவ்வொன்றியத்தில் மக்கண்டான் கோவில்பட்டியில் செல்வவிநாயகர் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 30ஆம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பச்சைக் குடிலுக்குள் கரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் அரிசி மாவுடன் வேப்பிலை கலந்து படையலிட்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர். அம்மை நோய் வராமல் காக்க கரகம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.