பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
01:04
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா நிகழ்ச்சியை ஒட்டி கொடுங்களூர் பகவதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை, பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில், நேற்று ஈழுவாதீயா குடும்ப சங்கத்தினரின் ஸ்ரீ கொடுங்களூர் பகவதி அம்மன் சிறப்பு அலங்கார நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம் முழங்க நடந்த திருவீதி உலா நிகழ்ச்சியில், தெய்வ அவதார வேடமிட்டு கலைஞர்கள் உலா வந்தனர். அதில், கேரள கருங்காளி ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நடப்பாண்டின், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும், 15ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. 16ம் தேதி மஞ்சள் நீராட்டு கொடியிறக்கம், 18ம் தேதி விடையாற்றி உற்சவம், உள்பிரகாரத்தில் அம்மன் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.