ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2025 10:04
கோவை; பங்குனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அணிந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர்.