Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே இடத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டது; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டது; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2025
10:04

உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையடுத்து நேற்றிரவு 7:00 மணிக்கு இங்குள்ள பச்சை மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படிக்களைதல் நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து மரகத நடராஜர் சன்னதி அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அலங்கார யாகசாலை பந்தலில் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர், சகஸ்ரலிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கலசம் புனித நீரால் நிரப்பப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. யாக வேள்வியில் பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், குருக்கள் வேத விற்பன்னர்களால் தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. ஒவ்வொரு சந்நிதியிலும் தர்ப்பை கலசம் கும்பம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் வைக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து ஏப்.,4 இரவு 7:00 மணி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஏப்‌.,4ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு இரவு 8:00 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடப்பட்டு கம்பி கதவுகளுடன் நடை அடைக்கப்படும். 2010ல் நடந்த கும்பாபிஷேகத்தில் இதுபோன்று சந்தனம் படி களைதல் நிகழ்வு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar