Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னார்குடியில் வெண்ணைத்தாழி திருவிழா; ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2025
12:04

மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து வழிபாடு செய்தனர்.


Default Image
Next News

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி திருவிழா இன்று நடைபெற்றது.  தவழும் கண்ணனாக வந்த ராஜகோபால சுவாமி மீது வெண்ணை அடித்து பக்தர்கள் வழிபட்டனர்.  இக்கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள் பங்குனி திருவிழாவும், அதனை  தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா  சென்ற   18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முக்கிய 16-ம் நாள் திருவிழா வெண்ணைத்தாழி உற்சவம்  நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணிக்கு துவங்கியது. சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கையில் வெண்ணெய் குடத்தை  ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ராஜகோபாலனின் முன், பின் அலங்காரங்களை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி வழிபாட்டதை காணமுடிந்தது.  4 வீதிகள் மற்றும் கடைவீதி வழியாக மதியம் 12.30 மணிக்கு  பந்தலடி வெண்ணைத்தாழி மண்டபம் சென்றடைவார்.  சுமார் 4 கிலோமீட்டர் தூரம்  சுவாமி வீதி உலாவில் உள்ளூர் பக்தர்கள்  மட்டும் அல்லாமல் வெளிமாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் இந்த வெண்ணைத்தாழி திருவிழாவில் பங்கேற்கின்றனர் என்பதால் நகரம் முழுவதும் விழாக்கோலமாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar