கோவை; சாய்பாபா காலனி வீதி எண் -09 ல் அமைந்துள்ள காளியம்மன் கோவில் 64-ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவானது பூச்சாட்டு நிகழ்வுடன் தொடங்கி அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றது. அதையடுத்து சக்தி கரகம் நிகழ்ச்சி, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பஞ்சமி திதியான இன்று சக்தி கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன்முகம் கொண்ட கலசங்கள் அணிக்கூடை என்று அழைக்கப்படும் மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி பக்தர்கள் சாய்பாபா காலனி, . கே.கே. புதூர் நகர வீதிகளில் காளியம்மன் வலம் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிறைவு நாள் நிகழ்வாக ஏப்ரல் 4ம் தேதி அன்று மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.