பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
01:04
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75ம் ஆண்டு வர்தந்தி மகோத்ஸவ விழா கடந்து 30ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்.,4ம் தேதி வரை நடைபெறும் விழாவில் சிருங்கேரி சாரதா மடத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் இன்று காலை காலை 7.00 மணி அஹ்னிகா தரிசனம், காலை 8.30 மணிக்கு ஜகத்குரு மஹாஸ்வாமிஜியின் அனுக்ரஹ பாஷணம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பா தேவிக்கு ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் சிறப்பு பூஜை செயது வழிபட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை 6.00 மணி. ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானத்திற்கு சாமூஹிக வந்தனம், , சிறப்பு சந்திரமௌலீஷ்வர பூஜை நடைபெற உள்ளது. மகாசன்னிதானத்தின் 75வது வர்தந்தி விழாவை முன்னிட்டு இன்று குரு நிவாஸ் மண்டபத்தில், நரசிம்ம வனத்தில் குருவந்தனா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.