சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தாயாருக்கு லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2025 04:04
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தாயாருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது.
இக்கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி பரமஸ்வாமி வீற்றிருக்கிறார். சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று காலை துவங்கி சவுந்தரவல்லி தாயாருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. அப்போது இரவு வரை குங்கும அர்ச்சனை நடத்தப்பட்டது. மாலை சுந்தரராஜ பெருமாள் ராமாவதாரத்தில் தாயாருடன் அருள் பாலித்தார். சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.