பதிவு செய்த நாள்
07
ஏப்
2025
05:04
கோவை; தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், ராமநவமியை முன்னிட்டு, ஸ்ரீ ராமர், சீதா லஷ்மணர், ஆஞ்சநேயர் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் பகுதியில் தென் திருப்பதி திருமலை ஸ்ரீ வாரி ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீராமநவமி வைபவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம். சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம்,பலி, சாற்றுமுறை, ஆர்த்தி நடைபெற்றது. பின், நித்யதிருக்கல்யாண உற்சவம் முடிந்து, மாலை நித்யஊஞ்சல் சேவை, அதை தொடர்ந்து, ஸ்ரீ ராமர், சீதா லஷ்மணர், ஆஞ்சநேயர் புறப்பாடு நடைபெற்றது. பின், ஸ்ரீ ராமருக்கு மாலை நேர பூஜைகள் செய்யப்பட்டு, ஏகாந்த சேவையுடன் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.