Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உற்ஸவ தேரோட்டம் கட்டிக்குளம் ராமலிங்க சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திரம்; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திரம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
10:04

நெய்வேலி; வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான காவடி திருவிழா நேற்று நடந்தது. நெய்வேலி மட்டுமின்றி சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி எடுத்தும், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள காவடி விநாயகர் கோவில் இருந்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மனைவி ராதிகா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மத்திய தொழில்நுட்ப அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களின் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. என்.எல்.சி., சார்பில் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார், என்.எல்.சி.,பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 12ம் தேதி இரவு தெப்பக்குளத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 13ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar