பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
புதுச்சேரி; காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள காலாப்பட்டு பாலமுருகன் கோவில், 53வது பங்குனி உத்திர செடல் விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத்தையொட்டி, செடல் திருவிழா நேற்று காலை 8:00 மணியவில் நடந்தது. ்விாழாவை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, கிரேனில் தொங்கியும், லாரி, கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை இழுத்தும், இ.சி.ஆர்., முக்கிய வீதிகளில் வழியாக கோவிலுக்கு வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி, தேரோட்டத்தில் சுவாமி அருள்பாலித்தார். பாலமுருகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலாப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பிள்ளைச்சாவடியில் இருந்து கனகச்செட்டிகுளம் சாலை தடை செய்யப்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை ஏற்பாடுசெய்திருந்தனர்.